Friday, March 16, 2007

விளையாட்டு விழா! பூப்பந்து!!!!

நின்று (மட்டுமே) ஆடிய வினோத் - கூட வெங்கடேஷ்





இது இரண்டாமாண்டு டீம்.... மர்பி, பாஸ்கர், ஆனந்த்(கீழ்), ஞானவேலு, சுந்தர், விஜய டி.ஆரின்.மருமகன் என்றழைக்கப்படும் சதீஷ்!

பூப்பந்து ரசிகர்கள்.!

5T சுனாமி சாந்தகுமார், கெண்டையான் விக்னேஷ், சூரியக்கதிர் வினோத்


இவரு எல்லா போட்டியிலயும் போட்டாவில இடம் பிடிக்கிறதுக்காகவே பங்கெடுத்த போட்டாகிராபர்! ராஜ பாண்டி
நிஸாரும் அருணும்!! ஓடுறாங்களாம்...... போட்டா எடுத்தவுடனே ஒதுங்கியாச்சு!
ரங்ஸ் அண்ணா, உமர் சார், குழந்தைகளுக்கு டூப் போடும் மதுசூதனன்

Sunday, March 11, 2007

தமிழ்த் தென்றல் -2

தம்பி, இரண்டாமாண்டு ஒலிப்பதிவுத் துறை லட்சுமி - சங்கமம் படத்திலிருந்த்து 'மழைத்துளி' பாட்டுக்கு ஆடிக் களைச்சபோது எடுத்தது.

பாட்டுப்புதிர் நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற அணி: 'ஆர்டர்' ராஜபாண்டி, 'அண்ணா யுனிவெர்சிட்டி' டேவிட், 'புலி வருது' தினேஷ்.
இரும்படிக்கிர இடத்தில ஈக்கு என்னவேலைன்னு பாக்குறீங்களா? கடைசி நேரத்தில சேர்ந்து - பசங்க எல்லாம் ஒரு பாட்டுக்காவது கண்டுபிடிச்சிடுன்னு ராஜபாண்டிக்கு சவால் விட்ட காட்சி இன்னும் மனசில நிக்குது. என்ன செய்ய நமக்கு இரண்டாமிடம் தான் கிடச்சது.

நடனப்போட்டியில கலந்துக்குவாங்கன்னு எதிர் பார்க்கப்பட்ட கலையரசியும், நிஸாரும் கடைசி நாளன்று ஆடிய குத்தாட்டம்!

மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி நிவேதிதா மேடமும் களமிறங்கி ஆடிய கலக்கல் காட்சி! புகைப்படங்கள்: சமா

ம்ம்ம்ம்.... அதுக்குள்ள முடிஞ்சுடுமா தமிழ் தென்றல்... இந்த ஆண்டின் சிறப்பு நிகழ்வா மாணவர்கள் நடத்திய ஆசிரியர்களுக்கான பாட்டுப்புதிர் இருக்குதே! அதை வீடியோவில பாருங்க!

தமிழ்த் தென்றல் -1

வழக்கம் போல நம்ம 'விஜய' ரஹ்மான் அண்மைக்கால விஜய் படமான 'போக்கிரி'யிலிருந்து ஆடிய ஆட்டம்! (இவரது பழைய ஹிட் 'மச்சான் பேரு மதுர' என்பது குறிப்பிடத்தக்கது.)


கீழ நின்னு குத்து குத்துன்னு குத்துறதில தினேஷும், அருணும் எப்பவும் கில்லாடிங்க!


ராஜேஷ் மேடையில ஆடியதை எடுக்காத்தால கீழ ஆடியதிலிருந்து ஒரு காட்சி


திரையிடல் சங்க செயலாளராக தீபிடிக்கிற மாதிரி ஒன்னும் பட போடாவிட்டாலும், 'தீ' நடனம் ஆடிய பட்ஜாயிண்ட் பத்மனாபன்!

தமிழ்த் தென்றல் நாயகர் 'முத்துமாணிக்கம்' அவர்கள்.

தமிழ்த் தென்றல் வீடியோ பதிவு விரைவில் வர இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக, இந்த புகைப்படப் பதிவு!!

Thursday, March 08, 2007

மொழி - ராதா மோகனுக்குப் பாராட்டு!

இன்று (08.03.07) நம் கல்லூரியில் மொழி படம் திரையிடப்பட்டது. இயக்குநர் ராதா மோகன் வந்திருந்து மாணவர் கருத்துகளைக் கேட்டார். "மாணவர்கள் முழுமையாக படத்தை ரசிக்கவும், மக்களோடு அமர்ந்து அவர்கள் எதை ரசிக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கும் அனைத்து மாணவர்களுக்கும் நாங்களே அனுமதிச்சீட்டு வாங்கித் தருகிறோம். பார்க்கச் சொல்லுங்கள்." என்று முதல் முறையாக வித்தியாசமான அணுகுமுறைக்கு அழைத்தனர் படக்குழுவினரும் பிரகாஷ் ராஜ் அவர்களும். ஆனாலும் கல்லூரி விதிகள் காரணமாக கல்லூரிக்குள்ளேயே திரையிடப்பட்டது.

மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராதாமோகனுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் விதமாய், "மாணவர்கள் அனைவரும் எழுந்து மொழியின் மொழியில் கைதட்டுங்கள்" என்று பிரின்சு வேண்டுகோள் விடுத்ததும், காதுகேளாதோர்-வாய்பேசாதோரின் சைகை (ஜாடை) மொழியில், இரு கைகளையும் உயர்த்தி ஆட்டி தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். இது கண்டு மிகவும் பூரிப்படைந்த இயக்குநர் ராதாமோகன், அதே சைகை மொழியில் நன்றியும் தெரிவித்து நிகழ்ச்சியை கவிதையாய் முடித்துவைத்தார்.



(நிகழ்ச்சியின் புகைப்படம் அடித்த பதிவில்)

Sunday, March 04, 2007

ஆசிரியர் மானவர் கிரிக்கெட்

இடப்பக்கமிருந்து சீனு சார்! வலப்பக்கமிருந்து ரங்ஸ் அண்ணா!

முதலில் களமிறங்கி ஆசிரியர் அணி ஆட, அதன் பிறகு மாணவர்கள்....
ஆடுவத்குள் இருட்டத்தொடங்கிவிட, மாணவர்கள் அணி 6 ஓவர் ஆடியதோடு ஆட்டம் சமநிலை அடைந்ததாக நிறைவு செய்யப்பட்டது.