Monday, February 19, 2007

கிரிக்கெட் (மிச்ச சொச்சம்)

இன்று நம் கல்லூரியின் விளையாட்டு விழா நடக்க இருக்கிறது. சரி, மிச்சம் இருக்கிற கிரிக்கெட் போட்டி படங்களை பார்த்துடுங்க....





பேட்ஸ்மேன் ரமேஷ்!! (சார்! எந்தக் கெமிக்கல் கலந்தால் நிறைய நேரம் நின்னுஆட முடியும்)








நம்ம போட்டாகிராபர் ஆர்டர் ராஜபாண்டி ஆர்வமா எடுத்த ஆராய்ச்சி படங்கள்.







இவருதான் அந்த ஆராய்ச்சி போட்டோகிராபர் (மேற்படி புகைப்படத்தை அவர் எடுத்தபோது அவரை நாம் எடுத்த புகைப்படம் கீழே இருப்பது)




மன்னிக்கனும், டாஸ்போட்ட படம் முன்னாடியே போடனுமில்ல...
அடுத்த பதிவில்...

சீனு சார் பவுலிங் .... கற்பனையல்ல நிஜம்

நம்ம ரங்ஸ் அண்ணா பந்து போட்டால்!

மற்றும் இன்றைய போடிகளின் படங்கள்!

ஆசிரியர்கள் vs மாணவர்கள் கிரிக்கெட் - 1

மாணவர்கள் பயிற்சி எடுக்கிறாங்க....




யாரது டெண்டுல்கரா? ஆமாங்க... திரைப்படக்கல்லூரியின் டெண்டுல்கர்... நம்ம ரங்ஸ் அண்ணா தான்.





இது கமெண்ட்ரி மேடை! ஒரே கலாய்த்தல் வாடை!!


மிச்ச சொச்சமும், சொச்ச மிச்சமும் அடுத்த பதிவுல.....

Sunday, February 18, 2007

எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரி விளையாட்டு விழாவின் முதல் நிகழ்ச்சியாக கடந்த 16.02.2007 வெள்ளிக்கிழமை அன்று சென்னை தியாகராயர் நகர், ராமகிருஷ்ணா பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.
முதலில் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. 15 ஓவர்களுக்கு, முதலாமாண்டு அணி 116 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இரண்டாமாண்டு அணி மிக எளிதில் போட்டியை வென்றது.


முதலாமாண்டுக்கும் இரண்டாமாண்டுக்குமிடயிலான போட்டியில் சில காட்சிகள்:

1. வியர்வையைத் துடைக்கும் ஸ்ரீதர், இரண்டாமண்டு, இரண்டாம் ஆண்டு அணித்தலைவர் கோபி (blue T-shirt)




2.இரண்டாமாண்டுக்கும் மூன்றாமாண்டுக்குமான போட்டி:

(வலமிருந்து): பேட் பிடித்தபடி கோபி(2-ஆம் ஆண்டு), ஓம்பிரகாஷ் (3-ஆம் ஆண்டு), பாஸ்கர் (2-ஆம் ஆண்டு), தினேஷ் (3-ஆம் ஆண்டு),



அடுத்து இரண்டாமாண்டு மாணவர்களுக்கும் மூன்றாமாண்டு மாணவர்களுக்குமான போட்டி நடைபெற்றது. நாட்டாமைக்கு அடுத்தபடி நல்ல தீர்ப்பு தரும் நம்ம ரங்ஸ் அண்ணாவும், உமர் சாரும் நடுவர் பொறுப்பேற்க போட்டி ஆரம்பமானது.




முதலில் களமிறங்கியது மூன்றாமாண்டு அணி. தினேஷும், நவீனும் புகுந்து, கொஞம் ரன் எடுத்தபடி தினேஷ் வெளியேற, னவீன் ஒரு மூன்று ஓவர் ஓவரா கட்டையை போட்டதால, அன்போட வெளியே வந்தார். ஒரு வழியா, 15 ஓவரில 127 ஓட்டங்கள் எடுத்தது மூன்றாமாண்டு அணி. அணித்தலைவர் பொறுப்பை ஏற்ற மணிமாறன் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து 48 ஓட்டங்கள் எடுத்து சிறப்பா ஆடினார்.




இதற்கு இடையில், மதிய உணவு இடைவேளை வந்தது. நம் பேராசிரியர்கள் எல்லாம் ரொம்ப அன்போட பரிமாற மாணவர்கள் செமத்தியா ஒரு ஆட்டம் ஆடினாங்க!

3. ராம்கி சார் பரிமாற, தினேஷ் வரிசையில முன்னாடி வந்த சந்தோசத்தில கூளிங் கிளாஸ் உடன் சிரிக்கிறான். பின்னாடி நின்று பச்சை டிசர்ட்டில மேஸ்திரி மாதிரி பார்க்கிறது.... அட, staff இல்லைங்க மூன்றாமாண்டு மாணவர் 'கஜினி' முருகன் தான்.


4. சீனு சாரும், பின்னாடி ஜீவா அண்ணனும் பரிமாறுகிறார்கள்.


ஸ்கோர் போர்டு பக்கத்தில உட்கார்ந்து சாப்பிடுறது நவீன், நின்னு சிரிக்கிற சிகப்பு டிசர்ட் நம்ம அருண் (3-ஆம் ஆண்டு)


5. இருக்கிறேன்னு ஆஜர் குடுக்கிறது 'கருப்புத் தங்கம்' லூகாஸ், வாயில் கைவைத்தபடி எழில், அதுக்குக் கீழ டேவிட், 'போஸ்' மோகன், அப்புறம் ஓம் பிரகாஷ், காதில போன் வச்சபடி தினேஷ், கீழ் கடைசியில பழனி


சாப்பாட்டுக்குப் பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில், இரண்டாமாண்டு அணி சிறப்பாக விளையாட அதனுடைய அணித் தலைவர் கோபி முக்கிய காரணமானார். அவர் 50 ரன்னுக்கும் மேல் எடுத்து தன்னுடைய அணி எண்ணிக்கையை உயர்த்தினார். சரி, இரண்டாமாண்டு ஜெயிச்சிடும்-னு எல்லாரும் நினைச்சுக்கிட்டிருந்தா, கடைசி ஓவரில கூட கடினமா போராடுது மூன்றாமாண்டு அணி(மானப் போராட்டம்).
கடுமையான போராட்டத்துக்குப் பின்னர், இன்னும் 3 பந்துகள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் வெற்றிபெற்றது இரண்டாமாண்டு அணி. ரொம்ப பெருந்தன்மையா தங்களுடைய இளையர்களின் வெற்றியை ஏற்றுக்கொண்டு வாழ்த்தினார்கள் மூத்தவர்கள்.
சரி, இதோட அன்றைய கூத்து முடியலை. பிறகு தொடங்கியது
Rest of 3rd Year vs Staff.
அதைப் பற்றி அடுத்த பதிவுல பார்ப்போம்.