Sunday, November 26, 2006

சொதப்பியது திருவிழா!

கோலகலமாக ஆரம்பமான 37-ஆவது பன்னாட்டு திரைப்பட விழா பெரும் சொதப்பல்களுடன் நடைபெற்றுவருகிறது.

அளவுக்கு அதிகமாக வழங்கப்பட்டுள்ள delegate pass காரணமாக பகுதிக்கு மேற்பட்டோர் எந்தத் திரையரங்கிலும் நுழையமுடியாமல் தவிக்கிறார்கள்.

தொடங்கி 3 நாட்கள் ஆன் பின்பும் கூட இன்னும் மலர் (கதைசுருக்கப் புத்தகம்) வழங்கப்படவில்லை.

25.11.2006 மதியம் அய்னாக்ஸ் திரையரங்கில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இரவு திரையரங்கினுள்ளேயே பிரச்சினை கிளம்பியது.

ஒட்டுமொத்த கட்டுப்பாடும் கோவா அரசின் Entertainment society of goa-விடம் சென்றுவிட்டதால், மத்திய அரசின் திரைப்படவிழா இயக்ககம் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.

இன்னும் சொதப்பல்கள் அடுத்தடுத்த பதிவுகளில்.......

Thursday, November 23, 2006

தொடங்கியது திருவிழா!

கோவாவில் 37ஆவது பன்னாட்டு திரைப்படவிழா இன்று (23.11.2006) தொடங்கியிருக்கிறது.
அதிகாரப் பூர்வமாக இன்றே தொடங்கினாலும், 20ஆம் தேதி முதலே படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
தொடரு பதிவுகளில் நிழற்படங்களும், கட்டுரைகளும் வரவிருக்கின்றன.