Sunday, April 14, 2013

Attention SRSE Diploma Holders

Dear Friends,
Doordarshan is in the process of recruiting staff for various positions. Recently they've called for online applications for the post of Engineering Assistant, Program Executive and Transmission Executive. 

As some of our Alumni employed at Doordarshan has pointed out that the Qualification criteria for the Post of Engineering Assistant has conveniently omitted the Diploma holders of SRSE, which was earlier there during the recruitment process in 2010. Hence, they suggested that we should address this and bring to the notice of the higher-ups at Prasar Bharati, Doordarshan and our state Information Secretary.

We've drafted a common letter which all our SRSE graduates may download, sign and send it to the concerned people without any delay. We've to bring back the Qualification criteria for the post and should also address them to include all our Diploma for the recruitment of creative positions at Doordarshan and other Government departments.

Kindly download, sign and send individually to all the people concerned without any delay. 

https://docs.google.com/file/d/0B5XxE4zrR4oBTFZOM0lva0tnX2s/edit?usp=sharing
https://docs.google.com/file/d/0B5XxE4zrR4oBdFZtU1BMc2E4NkU/edit?usp=sharing

Monday, April 08, 2013

Exam - Programme Executive and Transmission Executive


Combined Recruitment for the post of Programme Executive and 
Transmission Executive in Prasar Bharati, Examination - 2013

http://allindiaradio.gov.in/NR/rdonlyres/1D177C24-25E1-4C72-88ED-849D2889FDCE/20652/FinalCorrigendumforPEXsandTREXs.pdf

 



Haryana State Govt. Film & TV Institute - Faculties Needed


Dear Friends,
Haryana State Govt. Film & TV Institute has put-up an Advt. to recruit Faculty for the courses they conduct in which they have given eligibility for our Institute Diploma holders.
Interested persons may send in their Applications to the email given in the Advt.

You may also visit their website
http://sftv.ac.in/

The Last date to send in your Application is 6th May,2013.






Tuesday, November 29, 2011

கோவா திரைப்பட விழாவில் தமிழக மாணவர் படைப்புகள்!

கோவாவில் கடந்த நவம்பர் 23-ஆம் தொடங்கி, 42-ஆவது இந்திய பன்னாட்டு திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் புனே, கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் இயங்கிவரும் மூன்று முக்கிய திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படைப்புகள் திரையிடலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்று (நவம்பர் 28) திரையிடப்பட்டன. 


சென்னையில் இயங்கிவரும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களின் நான்கு குறும்படங்கள் விழா நடைபெறும் மக்கினஸ் பேலஸ் அரங்கில் திரையிடப்பட்டன. டி.சுரேஷ்குமார் இயக்கிய ‘கருக்கு’, கண்ணன் இயக்கிய ‘அச்சுப்பிழை’, சுவிக்குமாரின் இயக்கத்தில் ‘முகாரி’, பாக்கியராஜ் இயக்கிய ‘பாட்டி நா’ ஆகிய நான்கு குறும்படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. திரைப்படக்கல்லூரி பேராசிரியர் வி.எம்.ரவிராஜ், மாணவர்கள் சுரேஷ்குமார், மோகன் ஆகியோர் திரையிடலின் போது நினைவுப்பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். 




முன்னதாக திரையிடலையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “பன்னாட்டுத் திரைப்பட விழாவில் மாணவர்களின் படைப்புகளுக்கும் தனி இடம் அளித்தது மகிழ்ச்சிக்குரியது. மத்திய அரசின் செய்தி ஒளிபரப்புத் துறையின் கீழ் இயங்கும் கொல்கத்தா, புனே திரைப்படக் கல்லூரிகள் மட்டுமல்லாமல், முழுக்க முழுக்க தமிழக அரசால் மட்டுமே நடத்தப்படும் மிகவும் பழைமைவாய்ந்த எம்.ஜி.ஆர்.அரசு திரப்படக் கல்லூரிக்கும் இந்த சிறப்பு வழங்கப்பட்டிருப்பது பெருமைக்குரியதாகும். இதற்கென அமைக்கப்பட்ட குழுவின் பொறுப்பாளர் சென்னைக்கு வந்து, படங்களைப் பார்த்து தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.” என்று பேராசிரியர் வி.எம்.ரவிராஜ் தெரிவித்தார். கடந்த 22-ஆம் தேதி முதல் 30-க்கும் மேற்பட்ட திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இவ்விழாவில் பங்கேற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் தமிழகத்திலிருந்து லீனா மணிமேகலை இயக்கிய ‘செங்கடல்’ என்ற திரைப்படமும், நடிகை ரேவதி, ‘தசாவதாரம்’ கலை இயக்குநர் பிரபாகரன் ஆகியோர் இயக்கிய குறும்படங்களும் திரையிடப்பட்டன.

Monday, September 28, 2009

2007 & 2008 தமிழக அரசு குறும்பட விருதுகள்

2006-2007ஆம் ஆண்டுக்கான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்.

1. சிறந்த இயக்குநர் .. ச. அன்பு (அரிதாரம்)

2. சிறந்த ஒளிப்பதிவாளர் .. பா. தினேஷ் கிருஷ்ணன் (திற)

3. சிறந்த ஒலிப்பதிவாளர் .. எம். ராம்குமார் (தாய்)

4. சிறந்த எடிட்டர் .. பி. சசிகுமார் (தாய்)

5. சிறந்த படம் பதனிடுபவர் .. ரா. முருகன் (அகத்திணை)

2007-2008ஆம் ஆண்டுக்கான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்.

1. சிறந்த இயக்குநர் .. மு. கண்ணன் (அச்சுப்பிழை)

2. சிறந்த ஒளிப்பதிவாளர் .. ஆனந்தகுமார் (பழைய படம்)

3. சிறந்த ஒலிப்பதிவாளர் .. லட்சுமி நாராயணன் (கனா)

4. சிறந்த எடிட்டர் .. பி. மர்பி (கனவு மெய்ப்பட)

5. சிறந்த படம் பதனிடுபவர் .. வெங்கடேஷ் பிரசாத் (கனா)

விருதுகள் வென்ற மாணவர்களுக்கு எம் வாழ்த்துகள்!

Tuesday, November 18, 2008

நாளை (19-11-2008) கோவா பயணம்

கோவாவில் நடைபெறும் பன்னாட்டு திரைப்பட விழாவிற்காக சென்னையிலிருந்து நாளைய தினம் நமது எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்கள் பேராசிரியர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் கிளம்புகின்றனர். மாணவர்களுக்கு நமது வாழ்த்துகள்!