Wednesday, December 05, 2007
செம்மொழித் தமிழ் திரைக்கலைப் பயிலரங்கு!
Tuesday, September 25, 2007
Thursday, September 06, 2007
அக்காலம்
ஜெமினி ஸ்டூடியோசின் தலைமை சமையல்காரர் ஏ.என்.எஸ்.மணியன் அவர்களைப் பற்றிய 'அக்காலம்' ஆவணப்படம்.
தமிழகமெங்கும் பல இடங்களில் விருதுகள் பெற்ற இவ்வாவணப்படம் குழுவினரின் மற்றொரு சிறப்புப் படைப்பு என்பதில் அய்யமில்லை.
கர்ணமோட்சம்
இயக்கம்- முரளிமனோகர்,
ஒளிப்பதிவு - சிவராமன்,
படப்பதனிடுதல் - கீர்த்திபாசு
என மூனறு விருதுகளை அள்ளிய 'கர்ணமோட்சம்' குறும்படத்தினை நம்முடைய நண்பர்களின் பார்வைக்கு வைப்பதில் பெருமை அடைகிறோம்.
தமிழக அரசு விருது அறிவிப்பு! - வாழ்த்துகள்!
1. சிறந்த இயக்குநர் - என். பார்த்தசாரதி
2. சிறந்த ஒளிப்பதிவாளர்- பி. பிரசாத்
3. சிறந்த ஒலிப்பதிவாளர்- ஜே. பிரின்ஸ் டேவிட்
4. சிறந்த படத் தொகுப்பா ளர் - எஸ். சண்முகநாதன்
5. சிறந்த படம் பதனிடு பவர் - ஆர். அன்புசத்தியன்
2005-2006 ஆம் ஆண்டிற்கு, எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள விருதுகள் பின்வருமாறு:-
1. சிறந்த இயக்குநர் - எஸ். முரளிமனோகர்
2. சிறந்த ஒளிப்பதிவாளர்- ஜீ. சிவராமன்
3. சிறந்த ஒலிப்பதிவாளர்- வி. ஹேமநாதன்
4. சிறந்த படத் தொகுப் பாளர் - என். ஜான்பால்
5. சிறந்த படம் பதனிடு பவர் - எல்.கே. கீர்த்திபாசு
வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!
Sunday, August 26, 2007
Wednesday, August 22, 2007
மாணவர்பேரவைத் தொடக்கவிழா



மாணவர் பேரவை பொறுப்பாளர்கள்:
தலைவர்: கல்யாண ரமேஷ் (3 - இயக்குதல்)
துணைத்தலைவர்: பிரசன்னா (3 - ஒலிப்பதிவு)
பொருளாளர்: செந்தில் (3 - படத்தொகுப்பு )
செயலாளர்: ஹரிஹரசுதன்
இணைச் செயலாளர்: ரவீந்திரன்
திரையிடல் பேரவை பொறுப்பாளர்கள்:
செயலாளர்: மர்பி
இணைச் செயலாளர்: சுதன் & விஜய் லோகேஷ்
கவிஞர் பா.விஜய் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி
நன்றி: ரமணா, பிரசன்னா, சஜீஸ்
Tuesday, June 26, 2007
"ஓ...மனமே... உள்ளிருந்து அழுவது ஏன்?" -- ஜீவா மரணம்

அவரது 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட அனைத்து படங்களையும் ஒரு ரசிகனாக்க இருந்து ரசித்தவன் நான். எந்தவித சமூகக் கேடுகளுமற்ற பொழுது போக்குப் படங்கள் என்று அவரது படங்களை வரிசைப்படுத்தலாம். இன்னும், அவரது 12பி-யின் "சரியா? தவறா?" பாடலில் வரும் வைரமுத்துவின் பாடல்கள் எனக்கு பிடித்த பெண்ணுரிமை வரிகள்.
நீண்ட காலம் திரு. பி.சி. அவர்களிடம் உதவியாளராக இருந்து பயிற்சி பெற்றவர் ஜீவா.
தமிழ்த்திரையுலகின் இழப்பில் ஒரு திரை மாணவன் என்கிற முறையிலும், ஜீவா படங்களை ரசித்தவன் என்ற முறையிலும் எனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறேன்.
அவர் நினைவாக....
Tuesday, May 22, 2007
திரைப்படக் கல்லூரி சேர்க்கை அறிக்கை
11.5.2007 முதல் விண்ணப்பங்கள் கல்லூரியில் கிடைக்கின்றன.
C.I.T CAMPUS, CHENNAI - 600 113
Admission Notification for 2007-2008
Issue of Application Forms will commence from 11.5.2007
Last date of receipt of filled-in Application : 1.6.2007 5PM
Friday, March 16, 2007
விளையாட்டு விழா! பூப்பந்து!!!!
Sunday, March 11, 2007
தமிழ்த் தென்றல் -2

பாட்டுப்புதிர் நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற அணி: 'ஆர்டர்' ராஜபாண்டி, 'அண்ணா யுனிவெர்சிட்டி' டேவிட், 'புலி வருது' தினேஷ்.
இரும்படிக்கிர இடத்தில ஈக்கு என்னவேலைன்னு பாக்குறீங்களா? கடைசி நேரத்தில சேர்ந்து - பசங்க எல்லாம் ஒரு பாட்டுக்காவது கண்டுபிடிச்சிடுன்னு ராஜபாண்டிக்கு சவால் விட்ட காட்சி இன்னும் மனசில நிக்குது. என்ன செய்ய நமக்கு இரண்டாமிடம் தான் கிடச்சது.
நடனப்போட்டியில கலந்துக்குவாங்கன்னு எதிர் பார்க்கப்பட்ட கலையரசியும், நிஸாரும் கடைசி நாளன்று ஆடிய குத்தாட்டம்!
மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி நிவேதிதா மேடமும் களமிறங்கி ஆடிய கலக்கல் காட்சி! புகைப்படங்கள்: சமா
ம்ம்ம்ம்.... அதுக்குள்ள முடிஞ்சுடுமா தமிழ் தென்றல்... இந்த ஆண்டின் சிறப்பு நிகழ்வா மாணவர்கள் நடத்திய ஆசிரியர்களுக்கான பாட்டுப்புதிர் இருக்குதே! அதை வீடியோவில பாருங்க!
தமிழ்த் தென்றல் -1

கீழ நின்னு குத்து குத்துன்னு குத்துறதில தினேஷும், அருணும் எப்பவும் கில்லாடிங்க!
ராஜேஷ் மேடையில ஆடியதை எடுக்காத்தால கீழ ஆடியதிலிருந்து ஒரு காட்சி
திரையிடல் சங்க செயலாளராக தீபிடிக்கிற மாதிரி ஒன்னும் பட போடாவிட்டாலும், 'தீ' நடனம் ஆடிய பட்ஜாயிண்ட் பத்மனாபன்!
தமிழ்த் தென்றல் நாயகர் 'முத்துமாணிக்கம்' அவர்கள்.
தமிழ்த் தென்றல் வீடியோ பதிவு விரைவில் வர இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக, இந்த புகைப்படப் பதிவு!!
Thursday, March 08, 2007
மொழி - ராதா மோகனுக்குப் பாராட்டு!

மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராதாமோகனுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் விதமாய், "மாணவர்கள் அனைவரும் எழுந்து மொழியின் மொழியில் கைதட்டுங்கள்" என்று பிரின்சு வேண்டுகோள் விடுத்ததும், காதுகேளாதோர்-வாய்பேசாதோரின் சைகை (ஜாடை) மொழியில், இரு கைகளையும் உயர்த்தி ஆட்டி தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். இது கண்டு மிகவும் பூரிப்படைந்த இயக்குநர் ராதாமோகன், அதே சைகை மொழியில் நன்றியும் தெரிவித்து நிகழ்ச்சியை கவிதையாய் முடித்துவைத்தார்.

Sunday, March 04, 2007
ஆசிரியர் மானவர் கிரிக்கெட்
Monday, February 19, 2007
கிரிக்கெட் (மிச்ச சொச்சம்)
பேட்ஸ்மேன் ரமேஷ்!! (சார்! எந்தக் கெமிக்கல் கலந்தால் நிறைய நேரம் நின்னுஆட முடியும்)

நம்ம போட்டாகிராபர் ஆர்டர் ராஜபாண்டி ஆர்வமா எடுத்த ஆராய்ச்சி படங்கள்.
இவருதான் அந்த ஆராய்ச்சி போட்டோகிராபர் (மேற்படி புகைப்படத்தை அவர் எடுத்தபோது அவரை நாம் எடுத்த புகைப்படம் கீழே இருப்பது)

மன்னிக்கனும், டாஸ்போட்ட படம் முன்னாடியே போடனுமில்ல... அடுத்த பதிவில்...
சீனு சார் பவுலிங் .... கற்பனையல்ல நிஜம்
நம்ம ரங்ஸ் அண்ணா பந்து போட்டால்!
மற்றும் இன்றைய போடிகளின் படங்கள்!
ஆசிரியர்கள் vs மாணவர்கள் கிரிக்கெட் - 1
Sunday, February 18, 2007
முதலில் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. 15 ஓவர்களுக்கு, முதலாமாண்டு அணி 116 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இரண்டாமாண்டு அணி மிக எளிதில் போட்டியை வென்றது.

அடுத்து இரண்டாமாண்டு மாணவர்களுக்கும் மூன்றாமாண்டு மாணவர்களுக்குமான போட்டி நடைபெற்றது. நாட்டாமைக்கு அடுத்தபடி நல்ல தீர்ப்பு தரும் நம்ம ரங்ஸ் அண்ணாவும், உமர் சாரும் நடுவர் பொறுப்பேற்க போட்டி ஆரம்பமானது.


ஸ்கோர் போர்டு பக்கத்தில உட்கார்ந்து சாப்பிடுறது நவீன், நின்னு சிரிக்கிற சிகப்பு டிசர்ட் நம்ம அருண் (3-ஆம் ஆண்டு)
5. இருக்கிறேன்னு ஆஜர் குடுக்கிறது 'கருப்புத் தங்கம்' லூகாஸ், வாயில் கைவைத்தபடி எழில், அதுக்குக் கீழ டேவிட், 'போஸ்' மோகன், அப்புறம் ஓம் பிரகாஷ், காதில போன் வச்சபடி தினேஷ், கீழ் கடைசியில பழனி
