இன்று (08.03.07) நம் கல்லூரியில் மொழி படம் திரையிடப்பட்டது. இயக்குநர் ராதா மோகன் வந்திருந்து மாணவர் கருத்துகளைக் கேட்டார். "மாணவர்கள் முழுமையாக படத்தை ரசிக்கவும், மக்களோடு அமர்ந்து அவர்கள் எதை ரசிக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கும் அனைத்து மாணவர்களுக்கும் நாங்களே அனுமதிச்சீட்டு வாங்கித் தருகிறோம். பார்க்கச் சொல்லுங்கள்." என்று முதல் முறையாக வித்தியாசமான அணுகுமுறைக்கு அழைத்தனர் படக்குழுவினரும் பிரகாஷ் ராஜ் அவர்களும். ஆனாலும் கல்லூரி விதிகள் காரணமாக கல்லூரிக்குள்ளேயே திரையிடப்பட்டது.
மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராதாமோகனுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் விதமாய், "மாணவர்கள் அனைவரும் எழுந்து மொழியின் மொழியில் கைதட்டுங்கள்" என்று பிரின்சு வேண்டுகோள் விடுத்ததும், காதுகேளாதோர்-வாய்பேசாதோரின் சைகை (ஜாடை) மொழியில், இரு கைகளையும் உயர்த்தி ஆட்டி தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். இது கண்டு மிகவும் பூரிப்படைந்த இயக்குநர் ராதாமோகன், அதே சைகை மொழியில் நன்றியும் தெரிவித்து நிகழ்ச்சியை கவிதையாய் முடித்துவைத்தார்.
(நிகழ்ச்சியின் புகைப்படம் அடித்த பதிவில்)
No comments:
Post a Comment